இளவரசன் துட்டகைமுனு கொத்மலைக்கு சென்று தலைமறைவாக இருந்த போது அவரை தேடிச் சென்று அரசை பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது போல், சஜித் பிரேமதாசவை தேடிச் சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை ஏற்குமாறு அழைப்பு விடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவே தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் இளவரசன், அவருடன் மக்கள் சக்தி இருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை பொறுப்பேற்று வலுவான முன்னெடுத்துச் செல்ல அவருக்கு இடமளிக்க வேண்டும்.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, எங்கும் இல்லாத ஒன்றில் தேவையில்லாமல் தலையிட்டு தனது கௌரவத்தையும் இல்லாமல் ஆக்கிக்கொள்கிறார். கரு ஜயசூரிய சிறந்தவர் என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியினர் கோருவது கரு ஜயசூரியவை அல்ல எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.


















