உங்கள் வயதுக்கு ஏற்ப, உங்கள் சருமமும் வயதாகிறது. அப்போது என்னென்ன மாற்றம் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
20 வயதில் உங்கள் சருமம் அதிகபட்ச பொலிவுடன் காணப்படும், பதின்பருவ பருக்களின் பாதிப்பு தொடரும். குழந்தை பிறப்புக் கட்டுப்பாடு அல்லது கருத்தரித்தல் சருமத்தைப் பாதிக்கலாம்.
30வயதில், மரபுரீதியாக நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், பெரிதாக மாற்றம் இருக்காது, ஆனாலும் கண்ணின் கீழ் பைகள், வாயை சுற்றிலும் சிரிக்கும் கோடுகள் போன்றவை ஏற்படக்கூடும்.
40வயதில், வயதாவதன் தெளிவான அறிகுறிகளை சருமம் காண்பிக்க தொடங்கும். நெற்றி சுருக்கங்கள், உள்ளங்கையின் பின்புறம் சுருக்கம், கழுத்து மற்றும் புறங்கைகளில் சுருக்கம், தொங்கும் சருமம் போன்றவை ஏற்படக்கூடும்.