பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டனின் சகோதரர் ஜேம்ஸ் வெளியிட்டுள்ள தகவலால் மொத்த குடும்பமும் சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
கேட் மிடில்டனின் இளைய சகோதரர் பிரான்ஸ் நாட்டவரான Alizee Thevenet என்பவரை செப்டம்பர் 2019 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
ஆனால் உலகமெங்கும் கொரோனா பரவலை அடுத்து, தமது திருமணத்தை ஜேம்ஸ் தாமதப்படுத்தி வந்தார்.
மேலும் ஊரடங்கு காரணமாக திருமண ஏற்பாடுகளை ரத்து செய்த ஜேம்ஸ், தற்போது இரண்டாவது முறையாகவும் திருமண ஏற்பாடுகளை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் தமது திருமண ஏற்பாடுகளை மீண்டும் ரத்து செய்துள்ளதாக வெளியிட்ட தகவல் கேட் மிடில்டன் குடும்பத்தினரை மறுபடியும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே, Alizee Thevenet உடன் ஜேம்ஸ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, விடுமுறையை கொண்டாட தாங்கள் இத்தாலி செல்ல இருப்பதாகவும், மிக விரைவில் திருமண திகதியை வெளியிட இருப்பதாகவும் அறிவித்துள்ள்.