பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 2420 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனாவின் இரண்டாவது அலையை பிரித்தானியா எதிர்கொள்ள கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
கடந்த சில மாதங்களாக கொரோனாவின் தாக்கம் குறைவாக இருப்பது போல் தோன்றிய நிலையில், தற்போது பிரித்தானியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனாவால் புதிததாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 2420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேரின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பிரித்தானியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41,584 ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு அயர்லாந்தில் இதுவரை புதிதாக பாதிக்கப்பட்டோரின் புள்ளிவிவரங்கள் வெளியாகவில்லை.
நேற்று 2,948 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2,988-ஆக இருந்தது. அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் மருத்துவமனையில் 757 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 77 பேர் வென்டிலேட்டர்களைப் பயன்படுத்துகின்றனர்.
சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் இன்று தொற்றுநோயின் பரவல் அதிகரித்த பின்னர் இரண்டாவது உச்சம் வரக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் நாடு முழுவதும் கொரோனா வழக்குகள் அதிகரித்திருப்பது, அச்சுறுத்தலாகவே உள்ளது என்பதை நினைவூட்டுவதாக கூறியுள்ளார்.
கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருவதால், போல்ட்டனில்
உள்ள பப்கள் மற்றும் உணவகங்களை மூடும் படி அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின், தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டியும் மக்கள் சமூக தூரத்தை நிறுத்தினால் கொரோனா திரும்பி வரும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



















