யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்குப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை வீட்டிற்குள் உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து பேர் பொலிசாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கோப்பாய் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் கோண்டாவில் மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்று சோதனையிடப்பட்டது.
இதன்போது குறித்த வீட்டில் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் வீட்டில் இருந்த ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.