நாட்டின் தற்போதைய அரசாங்கம் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய தயாராகி வருவதாகவும் 19வது திருத்தச் சட்டம் மிகவும் ஜனநாயகமான திருத்தச் சட்டம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆட்சி முறைமையை மீண்டும் ஏற்படுத்துவதற்காகவே 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
எமது அணி மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் உடனடியாக 20வது திருத்தச் சட்டம் ஒழிக்கப்படும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.