அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் மார்ச் 20 முதல் சுமார் 8,800 ஆதரவற்ற புலம்பெயர்ந்த குழந்தைகளை நாட்டிலிருந்து இருந்து வெளியேற்றியுள்ளது.
நீதித்துறையால் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் மார்ச் 21 அன்று புதிய எல்லை விதிகளை அமல்படுத்தியது.
புலம்பெயர்ந்தோர் தங்க வைக்கப்பட்டிருக்கும் யைங்களுக்குள்ளும், அமெரிக்க மக்களிடையேயும் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க இந்த புதிய அவசரகால எல்லை விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என டிரம்ப் நிர்வாகம் விளக்கமளித்திருந்தது..
அப்போதிருந்து, அமெரிக்க அதிகாரிகள் நிலையான குடிவரவு நடவடிக்கைகள் இல்லாமல், ஆதரவற்ற குழந்தைகள் உட்பட குடியேறியவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி வருகின்றனர்.
ஜூன் மாதத்தில், அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் தலைவர் மார்க் மோர்கன், இந்த புதிய உத்தரவின் கீழ் ஆதரவற்ற சுமார் 2,000 குழந்தைகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறினார்.
இன்னும் பலர் விதிகளுக்கு உட்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்று குடிவரவு வழக்கறிஞர்கள் வாதிட்டனர், ஆனால் வெளியேற்றத்தின் நோக்கம் தெளிவாக இல்லை.
புதிய விதிமுறைகள் புலம்பெயர்ந்தோரை, குறிப்பாக குழந்தைகளை பெரும் ஆபத்தில் ஆழ்த்துவதாக குடிவரவு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஜூன் மாதத்தில் விதிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் மீது அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் வழக்குத் தொடர்ந்தது, மேலும் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி அரசாங்கம் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்துவிட்டது.
இதனையடுத்து சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட நீதிமன்றத்தில் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் புள்ளிவிவரங்களை அரசாங்கம் சமர்பித்தது.
அதன் படி, சுமார் 8,800 குழந்தைகளை வெளியேற்றியதோடு, ஒட்டுமொத்தமாக 1,59,000 புலம்பெயர்ந்தோரையும், 7,600 குடும்பங்களையும் வெளியேற்றியதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.