தென்னிந்திய கனவுகன்னியாக தற்போது வரையிலும் இருந்து வருபவர் நடிகை திரிஷா. சமீபத்தில் இவர் நடித்த 96 படத்தில் நான் வயதானவள் இல்லை என்று கூறி படவாய்ப்புகளை அள்ளி வருகிறார்.
சினிமாவில் பல கிசுகிசுக்கள் அனைவருக்கும் சகஜமான ஒன்று தான். அந்தவகையில் நடிகை திரிஷாவும் பல வதந்திகளில் சிக்கினார். நடிகர் ராணாவுடன் டேட்டிங். தொழிலதிபருடனான நிச்சயதார்த்தம் என்று பரபரப்பையும் கிளப்பினார்.
தற்போது 37 வயதாகியும் சினிமாவில் நடித்திருக்கும் திரிஷா இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருந்து வருகிறார்.
வெப் சீரீஸிற்கு சென்சார் கிடையாது என்பதால் நடிகைகள் பலரும் மோசமான காட்சிகள் ஆனாலும் துணிந்து நடிக்கிறார்கள்.
கிட்ட தட்ட மார்கெட் அவுட் என்ற நிலையில் இருக்கும் திரிஷாவும் வெப் சீரிஸ்களில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ள ஒரு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சமீபத்தில், நடிகை நித்யா மேனன் இது போன்ற காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கி மேலும் சில படங்களில் நடித்தும் வருகிறார்.