கொரோனாவை சமாளிக்க கடன் வாங்குவதுதான் சரியான வழி என்று ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவரது பட்ஜெட் கொள்கையை எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளார்கள். கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சமாளிப்பதற்கு அரசு எடுத்த விரைவான மற்றும் திறன்பட்ட நடைமுறைதான் காரணம் என ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா தெரிவித்துள்ளர்.
அரசு இத்திட்டத்திற்காக 96.2 பில்லியன் யூரோக்கள் கடன் வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், எதிர்க்கட்சியினர் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றம் சம்மதித்தால், இந்த கடன் தொகைதான் ஜேர்மன் வரலாற்றிலேயே அதிகம் வாங்கப்படும் இரண்டாவது அதிக கடன் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.




















