சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான Vivo புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை உலகளாவிய ரீதியில் அறிமுகம் செய்துள்ளது.
குறித்த கைப்பேசியானது Vivo V20 என பெயரிடப்பட்டுள்ளது.
6.44 அங்குல அளவுடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்ட இக் கைப்பேசியானது Qualcomm Snapdragon 720 processor, பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்டின் உதவியுடன் அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
இவை தவிர 44 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்கள் உடைய 3 பிரதான கமெராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அதிவேக சார்ஜ் தொழில்நுட்பம் மற்றும் 4000 mAh மின்கலம் என்பவற்றினையும் குறித்த கைப்பேசி கொண்டுள்ளது.