சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் பணியாற்றும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 3,500 பவுண்டுகள் வரை பெற உள்ளனர்.
இது தொடர்பாக சமீபத்தில் நடந்த வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 500,000 வாக்காளர்களில் மூன்றில் இருபங்கு பேர் இந்த ஊதிய விவகாரத்தை ஆதரித்துள்ளனர்.
இதனால் ஜெனீவாவில் குடியிருக்கும் தொழிலாளர்கள் இனி ஆண்டுக்கு குறைந்தபட்சம் 41,430 பவுண்டுகளை ஊதியமாக பெற உள்ளனர்.
இந்த புதிய கொள்கையானது அக்டோபர் 17 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே பிரேரணை முன்னர் 2011 மற்றும் 2014 ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் இரண்டு முறை வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையானது சுற்றுலா பயணிகள் மற்றும் வணிகம் தொடர்பான பயணிகளால் ஈட்டப்படும் வருவாயை நம்பியுள்ளது.
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜெனீவாவில், இலவச உணவுகளுக்காக மக்கள் பல மைல்கள் தொலைவு வரை வரிசையில் காத்திருக்கும் இக்கட்டான சூழலும் ஏற்பட்டது.
தற்போது நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய ஊதிய கொள்கையால், மிகக் குறைந்த ஊதியம் பெற்றுவந்த சுமார் 30,000 பேர் பலனடைவார்கள் என நம்பப்படுகிறது.
கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் சுவிஸ் மக்களில் ஒரு பகுதியினர் ஜெனீவாவில் வாழ முடியாத நிலை ஏற்பட்டது.
மிகச்சாதாரணமாக வாழவே சுமார் 4,000 பிராங்குகள் வரை தேவைப்படும் நிலை சுவிஸில் உள்ளது.
மட்டுமின்றி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டணமே 2,000 பிராங்குகள் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்தில் மட்டுமே அதிக மாத ஊதியம் வழங்கப்படுகிறது.
இங்கு ஆண்டுக்கு 57,000 பவுண்டுகள் வரை ஊழியர்கள் ஊதியமாக பெறுகின்றனர். இன்னொரு ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் இது 35,500 பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.