கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதால் வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இருக்கிறோம் என லண்டனில் உள்ள டவர் ஹேம்லெட்ஸ் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா அதிகரித்து வருவதால் டவர் ஹேம்லெட்ஸ் குடியிருப்பாளர்கள் மற்ற வீட்டார்களை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடியிருப்பாளர்கள் சமூக ஊரங்கை கடைபிடிக்குமாறு டவர் ஹேம்லெட்ஸ் மேயர் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு லண்டனில் உள்ள டவர் ஹேம்லெட்ஸ் கவுன்சில் குடியிருப்பாளர்களுக்கு மற்ற வீட்டார்களுடன் கூடி சந்திப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
இது வாழ்வா? சாவா? என்ற கட்டம் என்று குடியிருப்பாளர்களிடம் பெருநகர மேயர் ஜான் பிக்ஸ் கூறினார்.
ஏனெனில் ஒருவருக்கொருவர் பாதுகாக்க உங்கள் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள் என்று அவர் மக்களை வலியுறுத்தினார்.
பெருநகர மேயர் ஜான் பிக்ஸ் மக்களுக்கு எழுதிய திறந்த கடிதத்தில், கோடையில் வழக்குகளில் வீழ்ச்சி இருந்தபோதிலும், தற்போது வழக்குள் அதிகரிப்பதை நாம் காண்கிறோம், நிலைமை மீண்டும் மோசமடைந்து வருவதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இப்போது லண்டனில் கொரோனாவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் டவர் ஹேம்லெட்ஸ் ஒன்றாகும் என மேயர் ஜான் பிக்ஸ் கூறினார்.