சென்னை – ஐதராபாத் லீக் ஆட்டத்தின்போது டோனி மூச்சு விட முடியாமல் தவித்தது குறித்து இர்பான் பதான் பதிவிட்டுள்ள டூவீட் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டோனி வயதான நிலையில் துடுப்பாட்டத்தில் முடியாமல் திணறி வருகிறார். ஆனால், மற்ற வீரர்களை வயதை காரணம் காட்டி அவர் என்ன செய்தார் என குறிப்பிட்டு, பெயர் சொல்லாமல் கடும் விமர்சனம் செய்துள்ளார் பதான்.
டோனி தன் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக மோசமான கட்டத்தில் இருக்கிறார். அவரால் நிலையாக துடுப்பாட்டத்தில் ஈடுபட முடியவில்லை.
ஓட்டங்கள் குவித்தாலும் அது அணியின் வெற்றிக்கானதாக இல்லை. தோல்வி உறுதியான பின் அடிக்கும் சிக்ஸர்களால் என்ன பயன்? என்ற விமர்சனம் அவர் மீது முன் வைக்கப்படுகிறது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டோனி மிகவும் சிரமத்துக்கு உள்ளானார். அவரால் அணி தோல்வியை சந்தித்தது எனவும் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், இர்பான் பதான் தமது டுவிட்டர் பக்கத்தில், சிலருக்கு வயது என்பது ஒரு எண் மட்டுமே.
ஆனால், அடுத்தவர்களுக்கு அது அணியை விட்டு நீக்க ஒரு காரணம். இவ்வாறு பதிவிட்டு இருந்தார் இர்பான் பதான்.