பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கவிருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் புகைப்படம் கசிந்துள்ளது.
உலகம் முழுவதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், இன்று பிக்பாஸ் சீசன் 4 தொடங்கவுள்ளது.
தற்போது கொரோனா காலம் என்பதால் போட்டியாளர்கள் உள்ளே யார் யார் செல்கின்றனர்?… எத்தனை பேரை அனுப்புகின்றனர் என்ற கேள்வி ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்களை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. மேலும் பிக்பாஸில் நடிகை கேப்ரிலா நடனமாடும் புகைப்படமும், ரியோ ராஜ் கமலிடம் பேசுவது போன்றும் புகைப்படம் வெளியாகி இருவரும் உறுதியாக உள்ளே செல்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.