ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பத்திவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள் அனைத்தும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறமாட்டாது எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே அரச, தனியார் பாடசாலைகள் உட்பட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சேவைகளும் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.