பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்கள் தொழிநுட்ப கோளாறு காரணமாக தவறாக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றுறுதியானவர்களில் 15 ஆயிரத்து 841 பேரின் விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை என பிரித்தானிய பொது சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய நாளாந்தம் உத்தியோக பூர்வமாக வெளியிடப்படும் புள்ளி விபரங்களுக்கும், உண்மை விபரங்குளுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.