கொவிட்-19 தொடர்பில் அச்சமடைய வேண்டாம் என, கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி, டொனால்ட் ட்ரம்ப், 3 நாட்களில் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய அவர். ஆதரவாளர்களிடையே ஆச்சர்யமான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெள்ளை மாளிகைக்கு தனது உத்தியோகபூர்வ உலங்கு வானூர்தியில் வெளியேறியுள்ளார்.
தாம் நலமுடன் இருப்பதாக உணர்வதாக டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொடர்பில் அச்சமடைய வேண்டாம் என்றும், அதனை உங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த இடமளிகாதீர்கள் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.