இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றில் மிதந்த சடலத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகளை பொலிசார் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 70 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் பெளகாவி பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், மராட்டிய மாநிலம் சாங்லி பகுதியை சேர்ந்த 30 வயதான சாகர் பாட்டில் என்பவரின் சடலம் அது என தெரிய வந்துள்ளது.
உடலில் பல இடங்களில் கத்தியால் தாக்கியதன் காயங்கள் இருந்துள்ளது. தங்கம் கடத்தல் விவகாரத்தில் பாட்டில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.