கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
எப்போதும் செல்போனும், கையுமாக இருப்பதால், இவர் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தியுள்ளார். அப்போது சிறுமிக்கு பேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள பேரிகை என்ற கிராமத்தை சேர்ந்த தரணி என்பவன் நண்பராக அறிமுகமாகியுள்ளான்.
நாளைடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் பேஸ்புக் மற்றும் போனிலே பேசிவந்ததால், ஒரு கட்டத்தில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்ட்டதால், அவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கே இருந்த விபின்ராஜ் என்ற இளைஞரை பார்த்த சிறுமி, அவரிடம் தன் காதலனை பற்றி கூறியிருக்கிறார். அவரை சந்திக்க ஒசூருக்கு செல்ல இருப்பதாக சிறுமி கூறவே, தான் உதவி செய்கிறேன் அந்த இளைஞன் கூறியுள்ளார்.
யார் என்றே தெரியாத இளைஞனை நம்பி கடந்த 2-ஆம் திகதி சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது தான் வருவதை காதலனிடமும் தெரிவித்துள்ளார். விபின்ராஜ் தன் நண்பர்களான அஜித்ராஜ், ஜோபியன் ஆகிய 2 பேரையும் காரில் அழைத்து சென்றுள்ளார்.
செல்லும் வழியில் காரை நிறுத்திய அந்த கும்பல், சிறுமியை காருக்குள்ளேயே வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதனால் தனி ஒரு சிறுமியாக இருந்ததால், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அதன் பின் ஓசூர் பேருந்து நிலையத்தில் சிறுமியை விட்டுவிட்டு அந்த கும்பல் கிளம்பியிருக்கிறது. அங்கு இறங்கிய அந்த சிறுமி, காதலனுக்கு நடந்ததைக் கூற, காதலன் தரணி சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தன் மகளை காணாமல் பரிதவித்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அவர்கள் விசாரணையை தொடங்கினர். அப்போது சிறுமியின் செல்போன் ஒசூர் அருகே இருப்பதை கண்டறிந்த பொலிசார் அங்கு சென்று அவரை மீட்டனர்.
மேலும் காதலன் தரணியையும் பொலிசார் கைது செய்தனர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு நடந்த அத்தனை கொடூரங்களும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த விபின்ராஜ், அஜித்ராஜ் மற்றும் ஜோபின் ஆகிய 3 பேரை பொலிசார் கைது செய்தனர்.