பிரித்தானியாவில் எரிந்த நிலையிலிருந்த வீட்டுக்குள் தாயும் மகளும் உயிரிழந்து கிடந்த வழக்கில், முதன்முறையாக அந்த இளம்பெண்ணின் தந்தை மவுனம் கலைத்துள்ளார்.
பிரித்தானியாவின் லங்காஷையரிலுள்ள வீடு ஒன்றில், Dr சமன் மீர் சச்சார்வி (49) மற்றும் அவரது மகள் வியன் மாங்ரியோ (14) ஆகிய இருவரும் வாழ்ந்துவந்த நிலையில், இருவரில் உயிரற்ற உடல்கள் அங்கு கண்டு பிடிக்கப்பட்டன.
அவர்களை கொலை செய்ததாக பர்ன்லீயைச் சேர்ந்த ஷபாஸ் கான் (51) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தன் மகளைக் குறித்து முதன் முறையாக மவுனம் கலைத்துள்ளார் வியன் மாங்ரியோவின் தந்தையான Dr ஷௌக்கத் மாங்ரியோ.
அவள் என் தோழி, என் உயிர், என் எல்லாமே அவள்தான் என்று கூறும் வியனின் தந்தை ஷௌக்கத், அவளை மிகவும் மிஸ் பண்ணுகிறேன், அவள் எங்களுடன் இல்லை என்ற செய்தி என் இதயத்தை நொறுக்குகிறது.
பிரகாசமான எதிர்காலம் அவளுக்கு இருந்தது, அது இப்போது இலாமல் போயிருக்கிறது என்று கண்ணீர் விடும் ஷௌக்கத், அவள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயிலும் கனவில் இருந்ததாக தெரிவிக்கிறார்.
அவள் உயிருடன் இருந்திருந்தால், அவள் தன் கனவை விட அதிகம் சாதித்திருப்பாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் அவர்.
இதற்கிடையில் பிளாக்பர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷபாஸ் கான் மீது இரண்டு கொலைக்குற்றச்சாட்டுகளும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தீவைத்ததாக ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Dr சச்சார்வியின் வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவில் வசிக்கும் கான், விசாரணையின்போது தனது பெயரையும் முகவரியையும் தவிர வேறு எதையும் கூறவில்லை.
வியனின் உடற்கூறு ஆய்வும் முடிவுக்கு வராமல், குற்றவாளியும் எந்த உண்மையையும் கூறாமல், பரிதாபமாக கொல்லப்பட்ட ஒரு தாய் மகளின் மரணம் மர்மமாகவே நீடிக்கிறது.