ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து ஐந்து சூட்கேஸ்களுடன் துபாய் செல்ல முயன்ற இளம்பெண் ஒருவர் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பிரித்தானியரான தாரா ஹான்லான் (30) என்ற அந்த இளம்பெண்ணிடமிருந்த சூட்கேஸ்களை சோதனையிட்ட பொலிசார், அவற்றிற்குள் கட்டுக் கட்டாக பணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தாராவிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 2 மில்லியன் பவுண்டுகளாகும். இந்த ஆண்டில் சிக்கிய சட்ட விரோத பணத்தில், பெருந்தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தாரா மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும்வரை, அவர் காவலில் அடைக்கப்படுவார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், தாரா 14 ஆண்டுகள் வரை சிறையில் செலவிட வேண்டியிருக்கும்.