துபாயில் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டு பொதுமக்களுக்கு சேவையாற்றிய பொலிசாருக்கு இந்திய மாணவி மலர்கொத்து கொடுத்து வாழ்த்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
துபாய் நகரில் கொரோனா தொற்று காலத்தில் போக்குவரத்து மற்றும் மீட்புப்பணி பொலிசார் மிகவும் சிறப்பான முறையில் சேவை புரிந்தனர்.
இதில் துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் படிக்கும் அபர்ணா சாய் என்ற மாணவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக போக்குவரத்து பொலிஸ் பிரிவு அலுவலகத்திற்கு மலர் கொத்துக்களுடன் சென்றார்.
அவரை அதிகாரிகள் கனிவுடன் வரவேற்று பேசினர். அப்போது ஒவ்வொரு அதிகாரியாக இந்திய மாணவி சந்தித்து மலர்கொத்துகளை அளித்து கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்களுக்கு சிறப்பாக பணிபுரிந்ததற்காக பாராட்டு தெரிவித்து, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது மாணவி அபர்ணா சாய் கூறும்போது, கொரோனா தொற்று காலத்தில் துபாய் பொலிஸ் அதிகாரிகள் மிகவும் சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு சேவை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த மலர் கொத்துகளை அவர்களுக்கு அளித்துள்ளேன் என கூறினார்.
இது குறித்து போக்குவரத்து மற்றும் மீட்புப்பணி பிரிவின் இயக்குனர் டாக்டர் முகம்மது நாசர் அல் ரசூயி கூறும்போது, அபர்ணா சாய் என்ற மாணவி தனது மனப்பூர்வமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபோன்ற முயற்சி பொலிசாருக்கு ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல் இளம் மாணவர்களுடன் வலுவான உறவை தொடரும் விதமான புதிய அத்தியாயத்தை படைக்கும் என கூறியுள்ளார்.