உணவே மருந்து என்பது முன்னோர்கள் சொன்ன பழமொழி!. நாம் சாப்பிடும் உணவை கொண்டே நமது உடல் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படும்.
பொதுவாகவே காலை நேரத்தை விட மதியம் நேரத்தில் தான் பலருக்கும் அதிகம் பசிக்கும்.
அப்படியான மதிய நேரத்தில் சில உணவுகளை சாப்பிட கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா?
சூப்
மதிய நேரத்தில் சூப் போன்ற ஸ்னாக் வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். காரணம் இந்த வகை உணவுகள் சாப்பிட்ட உடனேயே பசி எடுக்க தொடங்கி விடும். இதனால் மேலும் அதிகமான அளவில் சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகும். கடைசியில் உடல் பருமனை தான் இவை உண்டாக்கும்.
பர்கர்
பர்கர் போன்ற உணவுகளை தான் இப்போதெல்லாம் அதிக அளவில் பலரும் சாப்பிடுகிறார்கள். இது மிக மோசமான ஆபத்தை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக பர்கர், பீட்சா போன்ற உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிட்டால் கொழுப்பு சத்துக்கள் மட்டுமே கிடைக்கும் என்பதால் அது இறுதியில் உடல் பருமனையே உண்டாக்கும்.
சாலட்ஸ்
சாலட்டில் மிக குறைவான அளவில் தான் கலோரிகள் உள்ளன. ஆனால், இது காலை நேரத்திக்கான உணவாக இருக்குமே தவிர மதிய நேரத்திற்கு ஏற்ற உணவாக இருக்காது.
சான்விட்ச்
எப்போதுமே பிரட் வகை உணவுகளை மதிய நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. காரணம் இதில் அதிக அளவில் கார்ப்ஸ் இருப்பதால் செரிமான கோளாறுகளை உண்டாக்கும் என்பதை மறவாதீர்கள்.
நூடுல்ஸ்
நூடுல்ஸ் உணவை மதிய நேரத்தில் சாப்பிடாதீர்கள். இது உங்களின் உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதிக்க கூடிய தன்மை பெற்றது. இவற்றில் உள்ள அதிக அளவிலான கார்ப்ஸ் உங்கள் உடல் நலத்தை பாதித்து எடையை அதிகரிக்க செய்யும், முக்கியமாக இதில் சத்துக்கள் மிக குறைவாகவே உள்ளது.