கொழும்பின் சில இடங்களில் அடுக்குமாடி கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
இதன்படி கொழும்பு 7 இல் உள்ள ஒட்டர்ஸ் கிளப்பிற்கு சொந்தமான இடத்திலும் அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அடுக்குமாடி கார் நிறுத்துமிடங்களைக் கட்ட அடையாளம் காணப்பட்ட பல முக்கிய இடங்களில் இந்த இடமும் உள்ளது.
அடுக்கு மாடி கார் நிறுத்துமிடங்களை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு வாகனங்கள் வருவதால் ஏற்படும் அன்றாட போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் திறந்த போட்டி கொள்முதல் செயல்முறையின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீட்டாளர்களால் அடுக்குமாடி கார் நிறுத்துமிடங்களை நிர்மாணிக்கும் மற்றும் பராமரிக்கும் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த திட்டத்தை இரண்டு முறைகளின் கீழ் செயல்படுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சராக சமர்ப்பித்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
ஒரு முறை- கொழும்புக்குள் எட்டு இடங்களில் மற்றும் பத்தரமுல்ல, அனுராதபுரம் மற்றும் கண்டி நகரங்களில் தனியார்-பொது கூட்டு நிறுவனமாக அடுக்குமாடி கார் நிறுத்துமிடங்கள் மற்றும் மெக்கானிக்கல் பார்க்கிங் நிலையங்கள் நிர்மாணிப்பதற்கான தனியார் துறை முதலீட்டாளர்களிடமிருந்து திட்டங்கள் கோரப்படும். .
மற்ற முறை, நாரஹன்பிட்டியில் அடுக்குமாடி கார் நிறுத்துமிடம் மற்றும் மெக்கானிக்கல் பார்க்கிங் நிலையங்கள், புறக்கோட்டையிலுள்ள டெலிகொம் கார் நிறுத்துமிடம், ஓட்டர்ஸ் கிளப்பின் தரிப்பிடம் மற்றும் கின்சி அவென்யூ – கொழும்பு 07 ஆகியவற்றில் அடுக்குமாடி கார் தரிப்பிடங்களுடன் வீடுகள் உள்ளிட்ட பொருத்தமான திட்டங்களை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் கோரப்படும்.
குத்தகைக் கொடுப்பனவுகளை நிர்வாகம் செலுத்த தவறியதையடுத்து ஒட்டர்ஸ் கிளப் சமீபத்தில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.