இன்று பல மக்கள் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சரியாக நீர் அருந்துவது, அதிக சக்தி வாய்ந்த மாத்திரைகளை சாப்பிடுவது, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஆகிய காரணத்தினால் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுகிறது.
முக்கியமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரோக்கியமான உணவுகள், சூப் போன்றவற்றை எடுப்பது நல்லது.
அந்தவகையில் தற்போது சிறுநீரக நோயால் அவதிப்படுபவர்களுக்கு உகந்த மூக்கிரட்டை கீரை சூப் எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மூக்கிரட்டை கீரை – 2 கையளவு
- பூண்டு – 2 பல்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பூண்டை தட்டிக்கொள்ளவும். மூக்கிரட்டை கீரையை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கீரையானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கடைசியில் அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.