சிறியளவலான வீடியோக்களை டப் செய்து தரவேற்றம் செய்யும் வசதியை தரும் பிரபல அப்பிளிக்கேஷனாக TikTok காணப்படுகின்றது.
உலக அளவில் பல மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டிருந்த போதிலும் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து பாரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானிலும் இந்த அப்பிளிக்கேஷன் தடை செய்யப்படவுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ஒழுக்கக்கேடான உள்ளடக்கங்களை கொண்டிருப்பதன் காரணமாகவே இவ்வாறு பாகிஸ்தானிலும் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மூன்று வெவ்வேறு பாகிஸ்தான் அரச நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதனால் டிக் டாக் ஆனது மேலும் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை இவ்வாறான பிரச்சினைகளுக்கு இதன் தாய் நிறுவனமான சீனாவிலுள்ள பைட் டான்ஸ் நிறுவனம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.