பயனர்கள் சட் செய்யும்போது அதிகமாக ஈமோஜிக்களை பயன்படுத்துவது வழக்கமாகும்.
இதன் காரணமாக மொபைல் சாதனங்களில் புதிய புதிய ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
அதேபோன்று கடந்த கொரோனா காலத்தினை கருத்திற்கொண்டு அனைவரையும் மாஸ்க் அணிய வைக்கும் முகமாக மாஸ்க் அணிந்த ஈமோஜிக்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
இவ்வாறு ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய ஈமோஜியில் தரப்பட்டிருந்த முகம் சோகமயமானதாக காணப்பட்டிருந்தது.
எனினும் புதிதாக அறிமுகம் செய்த iOS 14.2 பதிப்பில் குறித்த ஈமோஜி மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது பயனர்களுக்கு சற்று மாறுபட்ட அனுபவத்தினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



















