இணையப் பக்கங்களை அல்லது இணையத்தளங்களை பார்வையிடும்போது பொப்பப் வடிவிலான விண்டோக்கள் தோன்றி அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
விளம்பரங்களே அதிகமாக இவ்வாறு காண்பிக்கப்படுகின்றன.
எனவே இந்த எதிர்மறை அனுபவத்தினை இல்லாது செய்வதற்கு குரோம் உலாவில் வசதி தரப்பட்டுள்ளது.
அதாவது பொப்பப் விண்டோக்கள் தோன்றுவதை ப்ளாக் செய்ய முடியும்.
இதற்கு chrome://settings/content/popups எனும் முகரியை நகல் செய்து இணைய உலாவியின் முகவரிப் பட்டையில் செலுத்தி குறித்த முகவரிக்கு செல்லவும்.
அதன் பின்னர் தோன்றும் பக்கத்தில் Blocked என்பது Disable செய்யப்பட்டிருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்தவும்.
அவ்வாறு Disable செய்யப்படவில்லையாயின் Disable செய்யவும்.
அல்லது விரும்பிய இணையத் தள முகரிகளை இட்டு தனித்தனியே ப்ளாக் செய்யக்கூடிய வசதியும் இப் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்ததாக பொப்பப் விண்டோக்களை அனுமதிக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.
எந்தெந்த இணையத்தளங்களுக்கு பொப்பப் விண்டோவினை அனுமதிக்க வேண்டுமோ அதன் முகவரிகளை தனித்தனியே புகுத்த வேண்டும்.