இந்தியாவில் திருமணமான இளம்பெண்ணை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரை சேர்ந்தவர் ராம்பாலக் தாஸ். இவர் மகள் அல்பனாவுக்கும் கவுரவ் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்னும் கர்ப்பமாகி குழந்தை பெறாமல் இருப்பதாக கூறி அல்பனாவை கவுரவ் மற்றும் அவர் குடும்பத்தார் கொடுமைப்படுத்தி வந்தனர், இதோடு கூடுதல் வரதட்சணை கேட்டும் துன்புறுத்தினர்.
இரு தினங்களுக்கு முன்னர் அல்பனா தனது பெற்றோருக்கு போன் செய்து கணவர் குடும்பத்தார் மிகவும் கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதார், மேலும் தன்னை கொன்றுவிடுவார்கள் என பயமாக உள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து மகளை காண பெற்றோர் அங்கு சென்று போது கவுரவ் குடும்பத்தார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
பின்னர் உள்ளே அனுமதித்த போது வீட்டு அறையில் அல்பனா தீயில் கருகிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள், விசாரணையில் அல்பானாவை கணவர் மற்றும் குடும்பத்தார் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொன்றது தெரியவந்தது.
இது தொடர்பான புகாரையடுத்து கவுரவை கைது செய்துள்ள பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.