பிரான்சில் கொரோனா தீவிரம் காரணமாக சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா உச்சத்தை எட்டிய போது பிரான்ஸ் அரசாங்கம் பொது சுகாதார அவசரகால நிலையை அறிவித்தது.
கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், ஜூலை மாதம் பிரான்சில் அவசர நிலை நீக்கப்பட்டது.
தற்போது மறுபடியும் கொரோனா அதிகாரித்து வருவதால் அதைகட்டுப்படுத்த மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் பொது சுகாதார பேரழிவை உருவாக்குகிறது, அதன் தன்மை மற்றும் தீவிரத்தினால் மக்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது என்று அரசாங்கம் அவசரகால நிலையை அறிவிக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
ஆனால் அவசர நிலையை பிரகடனம் செய்வதின் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை விதிக்க அதிகாரிகளுக்கு அதிக அதிகாரங்களை பிரான்ஸ் அரசாங்கமம் வழங்கியுள்ளது.