மறைந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் உருவப்படத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
கொரோனா தொற்று காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் வெற்றிவேலின் உருவப்படத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் சி.ஆர்.சரஸ்வதி, செந்தமிழன் ஆகியோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
வெற்றிவேலின் மறைவையொட்டி அமமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.



















