பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு அமல்படுத்தியுள்ள மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு காரணமாக சுமார் 2 லட்சம் ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என அஞ்சப்படுகின்றது.
சுகாதார கட்டுப்பாடுகள் காரணமாக விருந்தோம்பல் துறையானது முற்றிலும் பாதிக்கப்படும் என்றும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீடுகளில் முடங்க நேரிடும் என முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய புதிய கட்டுப்பாடுகளின்படி ஆறு நபர்களுக்கு மேல் குழுக்களாக கூடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பலர் தங்களது கடைசி சந்திப்பினை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.ஆனால், இந்த கட்டுப்பாடுகள் வணிகத்தில் மிகப்பெரும் பேரழிவை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மத்திய லண்டனில் உள்ள உள்ள உணவகங்கள் மூடப்படுவது நல்லது என இங்கிலாந்து விருந்தோம்பல் துறையின் தலைமை நிர்வாகி, கேட் நிக்கோல்ஸ் கூறியுள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் இரண்டடுக்கு கட்டுப்பாடுகள் காரணமாக மத்திய லண்டனில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதில் மோசமான விடயம் என்னவென்றால் அரசு பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணத்தை அறிவிக்கவில்லை என்பதுதான். எனவே அரசு உடனே இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் வேலை ஆதரவு திட்டத்தின்படி ஒவ்வொரு ஊழியருக்கும் 67% ஊதியத்தை – அதிகபட்சம் மாதம் 2,100 டாலர் வரை அரசாங்கம் செலுத்தும்.
தகுதி பெறுவதற்கு குறைந்தபட்சம் ஏழு நாட்கள் பணியாளர்கள் வேலையில்லாமல் இருக்க வேண்டும், மேலும் அவர்களின் முதலாளி அவர்களின் சம்பளத்தை செலுத்த வேண்டியதில்லை.
ஆனால் இவையெல்லாம் மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமே அமலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.