ஊபர் நிறுவனமானது ஒன்லைன் வாகன வாடகை சேவை மற்றும் ஒன்லைன் ஊடாக உணவுகளை பெற்றுக்கொடுக்கும் சேவை என்பவற்றினை வழங்கி வருகின்றது.
இப்படியிருக்கையில் ஒன்லைன் ஊடாக உணவினைப் பெற்றுக்கொடுக்கும் சேவையான Uber Eat ஆனது மருந்துப் பொருட்களையும் டெலிவரி செய்ய ஆரம்பித்துள்ளது.
இச் சேவை முதன் முறையாக தென்னாபிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மக்கள் வீட்டிலிருந்தவாறே பொருட்களை பெற்றுக்கொள்ள முனைகின்றனர்.
இதனால் ஒன்லைன் ஊடாக உணவுகளை ஓர்டர் செய்வது அதிகரித்துள்ளது.
அதேபோன்று மருந்துப் பொருட்களையும் ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொள்வதும் விரைவில் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



















