முகத்தின் முழு அழகையும் நாம் பராமரிப்பது மிக அவசியமாகும். இதற்காக பல வகையான வேதி பொருட்களை முகத்தில் வாங்கி பூசி கொள்ள தேவை இல்லை.
மாறாக நம் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்தே நாம் அழகு பெறலாம். அந்த வகையில் பப்பாளி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பப்பாளியில் பல வகையான ஊட்டசத்துக்களும், தாதுக்களும் உள்ளன.
பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பதோடு சரும பொலிவையும் மெருகூட்டும். முகத்தில் படியும் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பு தன்மையையும் நீக்கும். சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்கி மென்மையையும், பொலிவையும் பெற்று தரும்.
பப்பாளி பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து பசைபோல் குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம், கழுத்து பகுதியில் பூசி, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் சருமம் மிளிரும்.
இன்றைய தேதியில் வீட்டை விட்டு வெளியே வந்தால் மட்டுமல்ல வீட்டிற்குள்ளே இருந்தாலும் தூசி அழுக்கு போன்ற பல விஷயங்கள் நம் அழகை கேள்விக்குறி ஆக்குகிறது. தூய்மையற்ற காற்று நம்மை சுற்றிலும் தற்போது பரவி இருக்கிறது. இதனால் நமது சரும ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகிறது.
பேஸ் மாஸ்க்
1/4 கப் கொக்கோ, 2 டீஸ்பூன் க்ரீம், 1/4 கப் கனிந்த பப்பாளி கூழ், 2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1/4 கப் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
பருக்கள் நீங்க
பப்பாளி விதைகளை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து கொண்டு முகத்தில் உள்ள பருக்கள் இருக்கும் இடத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். மேலும், பப்பாளி விதையில் வைட்டமின் எ உள்ளதால் முகம் பொலிவும் பெறும்.
கரும்புள்ளிகள் நீங்கள்
பப்பாளிப்பழத்தை சாறு எடுத்து வைத்துக் கொண்டு அதனை பஞ்சினால் முகம் முழுதும் ஒற்றி எடுக்கவும். பின்னர் உலர வைத்துக் கழுவி விடவும். பப்பாளிப்பழத்தை நன்றாக பிசைந்து அந்த சதையை முகம் முழுதும் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். இப்படி செய்வதால் கரும்புள்ளிகள் மற்றும் மங்கு போன்றவை மறைந்து முகம் பொலிவாக மாறும்.