மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிராண்டு இன் (in) எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சப் பிராண்டு மூலம் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறது.
புதிய பிராண்டு பற்றிய அறிவிப்பை ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் PLI அனுமதிகளை பெற்ற பின் வெளியிடுவதாக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய பிராண்டிங் இந்தியர்களின் தற்போதைய டிரெண்டிங் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் துவங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இன் பிராண்டின் தோற்றம், நிறம் உள்ளிட்டவை இந்தியாவின் நீல நிறங்களை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்திய பயனர்கள் முழுமையாக பயன்பெறும் நோக்கில் இந்த பிராண்டின் எதிர்கால திட்டங்கள் இருக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து இருக்கிறது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க மைக்ரோமேக்ஸ் ரூ. 500 கோடி முதலீடு செய்ய இருக்கிறது. அந்த வகையில் இன் பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டு உள்ளது.