கண்டி – கம்பளையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற நிலையளில் அங்குள்ள பகுதியொன்று முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பளை மில்லகாமுல பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனம்காணப்பட்டதால் குறித்த பிரதேசம் அவதானம் நிறைந்த பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கொனட்டுவெவ கிராமம் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 139 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த தொற்றாளர் உணவருந்தியதாக கூறப்படும் கம்பளை நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றும் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்தக் கிராமத்தில் நேற்று இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் மாத்தளை லக்கல பல்லேகம வைத்தியசாலைக்கும், இன்று இனம்காணப்பட்ட 36 வயதுடைய கொரோனா தொற்றாளரை மாரவில வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.