கைப்பேசிகள் பொதுவாக எந்தவொரு மொபைல் சேவை வழங்குநர்களினதும் சிம் கார்ட்டினை பயன்படுத்தக்கூடியவாறு தயாரிக்கப்படும்.
எனினும் தவணக் கட்டணங்களில் கொள்வனவு செய்யப்படும் கைப்பேசிகளில் குறித்த நிறுவனத்தின் சிம் கார்ட்டினை பயன்படுத்தக்கூடியவாறு லொக் செய்யப்பட்டிருக்கும்.
இந்த நடைமுறைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலேயே இந்த தடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஐக்கிய இராச்சியத்தின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவான Ofcom வெளியிட்டுள்ளது.
இதனால் BT/EE, Tesco Mobile மற்றும் Vodafone நிறுவனங்கள் லொக் செய்யப்பட்ட கைப்பேசிகளை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.