சீன ஸ்மார்ட் கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான OnePlus ஆனது 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
OnePlus Nord N10 எனும் குறித்த கைப்பேசியானது 6.49 அங்குல அளவுடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Snapdragon 690 mobile processor, பிரதான நினைவகமாக 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இதன் சேமிப்பு நினைவகத்தினை 512 GB வரை அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது.
தவிர 16 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 64 மெகாபிக்சல்கள், 8 மெகாபிக்சல்கள், 5 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை கொண்ட 4 பிரதான கமெராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் 4300 mAh மின்கலத்தினையும் கொண்டுள்ள இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.