உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்குண்டு பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.
பல உயிர்களை காவுகொண்ட கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு பல நாடுகளும் அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் உலகில் கடந்த 101 ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல ஓர் கொடிய நோயொன்று இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கு சான்றாக அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்து வந்த மக்களின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
உலக நாடுகள் எல்லாம் தம் மக்களை காப்பாற்றுவதற்கு போராடிவருவதுடன் சுகாதார முறைகளை கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தி வருகின்றன.
அத்துடன் கொடிய கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்பதற்காக முகக்கவசங்களை அணியுமாறு வலியுறுத்துகின்றது.
இந்த நிலையில் இதே நிலை ,இதே துயரம் இந்த உலகில் 101 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் கடைப்பிடித்த சுகாதார முறைகள் அதற்கு இந்த புகைப்படங்கள் சாட்சியாகின்றன.
அதனால் இந்த கொடிய கொரோனா எனும் அரக்கனின் பிடியில் இருந்து நிச்சயமாக நாம் மீண்டு எழுவோம்.
நூறு ஆண்டும் பிரச்சனை அல்ல நூறு ஆண்டுகளின் பின்னும் இன்றைய காலகட்டமானாலும் நோய் பரவுதல் என்பதில் உள்ள பிரச்சனை சமுதாயம் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் எல்லாம் சுகமாக கடந்து விடும்.
இருந்தாலும் இன்றைய சமூகம் தனது சுயநலம் சார்ந்து மட்டும் செயல்படுவதிலிருந்து விலகி இந்த நோய் பரவல் என்கின்றது.
ஒரு உலகப் பிரச்சனை ,எல்லோரும் ஒருமித்தால் மட்டுமே இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்ற உண்மையை (சுயநலம் தவிர்த்து) ஏற்றுக் கொண்டால் மிகவும் வேகமாக உலகமும் ஒவ்வெருவரும் சுபீட்சமடையலாம்.
ஆகவே இதுவும் கடந்து போகும் என நம்புவோம்.