ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகள் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 15 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக நோர்ட் பிராந்தியத்திற்கான நிர்வாகம் அறிவித்துள்ளது.
உயிரிழந்த நால்வரில் ஐந்து மற்றும் எட்டு வயதான இரண்டு சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவின் பிரஸ் அசோசியேஷன் செய்தி நிறுவனம் இந்த ஆண்டு இதுவரை 7,400க்கும் மேற்பட்ட அகதிகள் படகு மூலம் கால்வாயை கடந்து பிரித்தானியா வந்துள்ளதாக கணக்கிட்டுள்ளது.
My statement on those who tragically lost their lives in the Channel today. pic.twitter.com/W7zT5NKINr
— Boris Johnson (@BorisJohnson) October 27, 2020