பெண்களுக்கு அழகு என்றாலே முகம் தான். இந்த முக அழகை மேலும் அழகு பெறுவதற்காக, கடைகளில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு, மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஆனால் அதன் விளைவு ஆரம்பத்தை நல்ல பளபளப்பை தந்தாலும், கடைசியில் முகத்திற்கு அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே முக அழகை காக்க இயற்கை முறையில் சில பொருட்களை வைத்தே முக அழகினை இயற்கை முறையில் பெற முடியும்.
அந்தவகையில் தற்போது எந்த ஒரு பக்க விளைவுகளையும் இன்றி எப்படி முகத்தை இயற்கை முறையில் மெருகூட்டலாம் என பார்ப்போம்.
- உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். எண்ணை வழியும் முகத்திற்கு மருந்து கடைகளில் ஹெர்பல் ஸ்கின் டானிக் கிடைக்கும். இதனை இரவில் முகத்தில் பூசிக்கொள்ளவும்.
- வெள்ளரிச்சாறு இரண்டு ஸ்பூன், துளசிச்சாறு இரண்டு ஸ்பூன், புதினா சாறு அரை ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு அரை ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும். பஞ்சை இந்த சாற்றுக் கலவையில் முக்கி முகம் பூராவும் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவி விடவும்.முகம் பட்டுப் போல் மென்மையாக இருக்கும்.
- ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் புது மெருகோடு இருக்கும்.
- கசகசாவில் எலுமிச்சம் பழச்சாறு விட்டு மை போல் அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் மறைந்துவிடும். முகம் கவர்ச்சிகரமாகவும், அழகாகவும் இருக்கும்.
- முள்ளங்கி சாற்றுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து ஊற வைத்து வந்தால் முகம் நல்ல நிறம் பெறும்.
- முகப்பரு உள்ள இடத்தில் சந்தனம், மிளகு, ஜாதிக்காய் ஆகிய மூன்றையும் நீர்விட்டு இழைத்து போட்டு வந்தால் பரு தானே மறைந்து விடும்.



















