தமிழகத்தில் வேலை கிடைத்தால் நேர்த்தி கடனாக உயிரை தருவதாக வேண்டி, வங்கி மேலாளர் வேலை கிடைத்த 15 நாட்களில் உயிரை மாய்த்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்தவர் நவீன் (32). இவருக்கு சிறு வயது முதலே கடவுள் பக்தி அதிகமாக இருந்து வந்துள்ளது. இவர் என்ஜினியரிங் படித்து முடித்தபின்னர் வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். வங்கி தேர்வுகளும் எழுதிய நிலையில் அவருக்கு எந்த வேலையும் கிடைக்காத காரணத்தால், இறைவனிடம், வேண்டுதலாக தனக்கு வேலை கிடைத்தால் உயிரை காணிக்கையாக தந்து நேர்த்தி கடனை செலுத்துவதாக வேண்டியுள்ளார்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக கிடைக்காத வேலை தற்போது கிடைத்துள்ளது. வங்கி உதவி மேலாளராக கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பணி கிடைத்துள்ளது.
வேலைக்கு சேர்ந்து 15 நாட்களுக்கு பின் நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தவர் அங்கிருந்து மார்த்தாண்டத்தில் உள்ள தனது நண்பரையும் பார்த்து பேசிவிட்டு அதன் பின் தனது சகோதரரிடம் தான் ஊருக்கு வந்துள்ளதாகவும் தொலைபேசியில் கூறியுள்ளார்.
பின்னர் பேருந்தில் நாகர்கோவில் வந்திறங்கி அங்கிருந்து புத்தேரி பகுதியில் உள்ள ரயில்வே பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். அதற்கு முன் அவர் தனது தாய், தந்தைக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
அதில் தான் பல ஆண்டுகளாக வேலை கிடைக்காத காரணத்தால் வேலை கிடைத்தால் காணிக்கையாக தனது உயிரை தருவதாக இறைவனிடம் வேண்டுதல் வைத்ததாகவும், தற்போது நினைத்த வேலை கிடைத்திவிட்டதால் நேர்த்தி கடனை செலுத்தி இறைவனிடம் செல்வதாகவும் எழுதி வைத்துள்ளார்.
இதையடுத்து நவீனின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.