சீனாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் பிரித்தானியர் என்று அறியப்பட்ட நபர் விபத்து காரணமாக உயிரிழந்திருக்கும் சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அது அப்படியே பொது போக்குவரத்துகள் மூலம், பல்வேறு நாடுகளுக்கு பரவிவிட்டது.
இன்று அந்த வைரசில் இருந்து விடுபட வேண்டும் என்றால், கட்டாயம் தடுப்பூசி வேண்டும் என்றளவிற்கு ஆகிவிட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டும் சீனாவின் வுஹானில் ஒரு கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது Connor Reed என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இவர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரித்தானியர் என்று கூறப்பட்டது. அதன் பின் சில வைத்தியங்கள் மூலம் அந்த கொரோனாவில் இருந்து மீண்டார். குறிப்பாக இந்த நோயில் இருந்து தப்பிப்பதற்கு, மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளை சாப்பிடாமல், சூடான விஸ்கி மற்றும் தேன் போன்றவற்றை கலந்து குடித்து வந்தார்.
அதன் பின் அதில் இருந்து மீண்டார். பிரித்தானியாவின் வடக்கு வேல்ஸில் உள்ள லாண்டுட்னோவைச் சேர்ந்த இவர், கொரோனாவில் இருந்து மீண்ட பின் பிரித்தானியா திரும்பினார்.
Bangor பல்கலைக்கழகத்தில் சீன மொழியில் பட்டம் பெற்றார் .
இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் இவரது தாய் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் இவர் குறித்து சோகமான தகவலை பதிவிட்டுள்ளார்.
அதில், கடந்த வாரம் பாங்கூர் பல்கலைக்கழகத்தில் நடந்த மோசமான விபத்து காரணமாக என்னுடைய மகன் இறந்துவிட்டார் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
அவரை தனது சகோதரர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் மிகவும் தவறவிடுவார். மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே நீங்கள் எங்கள் வாழ்க்கையில் இருந்ததற்கு நாங்கள் பாக்கியவானர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், பிரபல ஆங்கில ஊடகமான தி சன் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தனது மகன் கடுமையான ஊரடங்கு விதிகளை தாங்குவதற்கு முன்பு வைரஸைப் பிடித்தான். இதனால் சீனாவில் நிறைய கஷ்டங்களைத் தாங்கினான்.
எங்களுக்குத் தெரிந்தவரை, அவனை விட யாரும் அதிக நாட்கள் ஊரடங்கில் இருந்திருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ஏனெனில், சீனாவின் 16 வாரங்கள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடு, அவுஸ்திரேலியாவில் இரண்டு வாரங்கள் மற்றும் பிரித்தானியாவில் மூன்று வாரங்கள் என்று கூறினார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் வுஹானில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
மூன்று வருடங்கள் சீனா நாட்டில் வாழ்ந்த அவர் இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டு மோசமான நிலைக்கு சென்றார்.
அப்போது அவர், நான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று மருத்துவர்கள் சொன்னபோது நான் திகைத்துப் போனேன், நான் இறந்துவிடுவேன் என்று நினைத்தேன், ஆனால் நான் அதை வெல்ல முடிந்தது.
நான் இன்ஹேலரைப் பயன்படுத்தினேன், இது இருமலைக் கட்டுப்படுத்த உதவியது. அது வெளியேறும் வரை தேனுடன் ஒரு சூடான விஸ்கியைக் குடித்து வந்தேன், இது ஒரு பழங்கால தீர்வு என்று அவர் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.