பிரான்சில் தேவாலயத்தை மூடிக் கொண்டிருந்த போது, பாதிரியார் ஒருவர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், அவர் உயிருக்கு போராடி வரும் நிலையில், அவரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
பிரான்சின் Lyon பகுதியில் இருக்கும் தேவாலயம் ஒன்றை கிரேக்க மரபுவழி பாதிரியார் ஒருவர் மூடிக் கொண்டிருந்த போது, திடீரென்று மர்ம நபர் அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அதன் பின் குறித்த பாதிரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், தற்போது உயிரிழந்த பாதிரியாரின் பெயர் மற்றும் அவர் புகைப்படத்தை பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதில், நேற்று மாலை உள்ளூர் நேரப்படி நடந்த சம்பவத்தில், பாதிப்புக்குள்ளான நபரின் பெயர் Nikolas Kakavelakis(45) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர், தேவாலயத்தை மூடும் நேரத்தில், இரண்டு முறை அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக பல மணி நேரம் கழித்து கபாப் கடை ஒன்றில் இருந்த நபரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் தான் இந்த செயலில் ஈடுபட்டவர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை, இந்த தாக்குதல் தொடர்பாக பொலிசார் வேறு யாரையும் தேடுகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.