இலங்கையில் இன்னும் இரண்டே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்டபோது அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் இன்னும் இரு வாரங்களிற்குள் கொரோனா தொற்றாளர்களின் பரவும் வீதமும் குறைவடைந்துவிடும் எனவும் அவர் கூறினார்.
எனவே பொதுமக்கள் அனைவரும் சுகாதாரத்துறைக்கு மிகவும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.