அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இது ஒரு சுவாரஸ்ய நிகழ்வாகும்… அது என்னவென்றால், அமெரிக்காவில் New Hampshire என்றொரு பகுதி உள்ளது. அதில் Dixville Notch என்ற தொகுதியும், Millsfield என்ற தொகுதியும் உள்ளன.
அதில், Dixville Notch தொகுதியில்தான் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதுவும், அனைத்து வாக்குகளையும் அவர் சுருட்டிக்கொண்டுள்ளார், அவரை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை…
இதில் வேடிக்கை என்னவென்றால், Dixville Notch தொகுதியின் மொத்த மக்கள்தொகையே 12தான் (2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி).
அதிலும் 5 பேர்தான் வாக்காளர்கள்! அந்த ஐந்து பேர் வாக்களித்ததில், ஐந்து பேருமே ஜோ பைடனுக்குதான் வாக்களித்துள்ளார்கள். ஆகவே, 5 வாக்குகளையும் பெற்று ஜோ பைடன் வெற்றிபெற, ஒரு வாக்கு கூட கிடைக்காமல் தோல்வியடைந்துள்ளார் ட்ரம்ப்.
அதேபோல், 12 மைல் தொலைவில் அமைந்துள்ள மற்றொரு தொகுதி Millsfield, அதன் மக்கள் தொகை 21.
அந்த 21 பேரில், 16 வாக்குகள் ட்ரம்புக்கும், 5 வாக்குகள் ஜோவுக்கும் கிடைத்துள்ளன. ஆக, அந்த தொகுதியில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.