என்ன நடந்தாலும் சரி, இரண்டாவது ஊரடங்கு அடுத்த மாதம் முடிவுக்கு வந்துவிடும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ள இரண்டாவது ஊரடங்கிற்கு கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே கடுமையான எதிர்ப்பு தோன்றியது. பிரதமர், இந்த குளிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பேரழிவை தடுக்க தனது திட்டங்கள்தான் ஒரே தீர்வு என தெரிவித்திருந்தார்.
ஆனால், நாடாளுமன்றத்தில், இரண்டு மணி நேரம் பிரதமரை வறுத்தெடுத்த கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் ஊரடங்கு திட்டங்கள் பொருளாதாரத்தை மூழ்கடித்துவிடும் என எச்சரித்தார்கள்.
எனவே வேறு வழியின்றி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முடிவுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்த புதிய வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
என்ன நடந்தாலும் சரி, இந்த கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி முடிவடைந்துவிடும் என்றார் அவர்.
இப்போதைக்கு தேசிய அளவில் அறிவிக்கப்படும் இந்த கட்டுப்பாடுகளை நம் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்துவிட்டால், நமக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் உருவாகும் வாய்ப்புள்ளது என்று நான் கருதுகிறேன்.
அதன் பின், நாம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய வாரங்களிலும், அதற்குப் பிறகும் மக்களுக்கு ஷாப்பின் செய்ய கொஞ்சம் வாய்ப்புக் கொடுக்கும் வகையில் டிசம்பரில் மீண்டும் கட்டுப்பாடுகளை நீக்கலாம் என்று கூறியுள்ளார் போரிஸ் ஜான்சன்.