அமெரிக்க அதிபருக்கு தேர்தல் வாக்குப்பதிவு ஒரு புறம் நிறைவு பெற்றும் வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையில் யார் முன்னிலை என்பது குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவில் பல்வேறு நேரங்கள் பின்பற்றப்படுவதால் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு, முடிவுகள் அறிவிப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இண்டியானா, கென்டகி மாகாணங்களில் உள்ளூர் நேரப்படி இரவு 6 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது.
இதே மாகாணங்களில் சில பகுதிகளில் இரவு 7 மணிக்குதான் வாக்குப் பதிவு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stocks have risen sharply in the final two days of the U.S. election season as investors bet on the likelihood of a Joe Biden win for president https://t.co/IcCO5KF1Ba pic.twitter.com/oacI5ih3GY
— Reuters (@Reuters) November 4, 2020
வாக்குப் பதிவு நிறைவடைந்து முடிவு அறிவிக்க சில நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடிவு எப்போது வேண்டும் என்றாலும் வெளியாகலாம் என்று கூறப்பட்டது.
இதையடுத்து முதல் கட்டத்தில் புளோரிடா மாகாணத்தில் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருந்தார், ஆனால் இப்போது ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார். இதனால் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இது மட்டுமின்றி, இண்டியானா மாகாணத்தில், 11 எலக்டோரல் வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
அதே சமயம் வெர்மொண்ட்டில் 3 எலக்டோரல் ஓட்டு வாக்குகள் பெற்று, ஜோ பைடன் வெற்றி பெற்றிருப்பதாக பாக்ஸ் நியூஸ் மற்றும் ஏ.பி.நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை டிரம்ப் 13 எலக்டோரல் வாக்குகள் பெற்றும், அதே சமயம் ஜோ பைடன் 3 எலக்டோரல் வாக்குகள் பெற்றுள்ளார்.
டிரம்ப் Indiana, Kentucky மற்றும் West Virginia-வில் வெற்றி பெற்றுள்ளதாகவும், ஜோ பைடன் Vermont-ல் வெற்றி பெற்றிருப்பதாகவும், மற்ற மாகாணங்களான டெக்சாஸ், நியூ ஹாம்ஷ்பையரில் ஜோ பைடன் முன்னிலையில் இருப்பதுடன் தெற்கு கரோலினாவில் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி, ஜோ பைடன், VIRGINIA-வில் வெற்றி பெற்றுள்ளார். ஜார்ஜியாவில் ஆரம்ப கட்ட முடிவுகள் ஜோ பைடனுக்கு சாதமாக இருக்கிறது, இதில் அவர் வெற்றி பெற்றால் ஜனாதிபதி பதவியை வெல்வதற்கான ஊக்கத்தை இது அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
சற்று முன் வரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை வைத்து பார்க்கும் போது, டிரம்ப்பிற்கு கடும் போட்டியாக ஜோ பைடன் இருந்து வருகிறார்.
இதுவரை பெற்ற எலக்டோரல் வாக்குகள்
டிரம்ப் இதுவரை மொத்தம் 24 வாக்குகள் பெற்றுள்ளார். அதில், இண்டியானாவில் 11 வாக்குகளும், கெண்டகியில் 8 வாக்குகளும், மேற்கு விர்ஜினியாவில் 5-ம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் ஜோ பைடன் இதுவரை 16 வாக்குகள் பெற்றுள்ளார். அதில் Vermont 3-ம் VIRGINIA-வில் 13-ம் பெற்றிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் தங்கள் அதிபரை நேரடியாக தெரிவு செய்ய முடியாது, அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப எலக்ட்ரோல் காலேஜ் உருவாக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் தேர்வுக் குழுவுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்.
அந்த வகையில் அமெரிக்காவில் 538 வாக்காளர் குழு இருக்கிறார்கள். இதில் 270 வாக்காளர் குழுவின் வாக்குகளைப் பெறுபவர்கள் அதிபர் தேர்தலில் வெல்ல முடியும்.