ஜோதிடத்தில் பல கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் சிறந்தவை 9 கற்கள்.
முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகிய ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் நம் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.
இந்த ராசிகற்கள் நேர்மறை சக்தி, அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்றும் நம்பப்படுகிறது.
அந்தவகையில் இந்த 9 ராசிக்கற்கள் பதித்த மோதிரத்தை யார் எல்லாம் அணியலாம்? யார் எல்லாம் அணிய கூடாது என பார்ப்போம்.
நவரத்தின மோதிரம் தரும் அதிர்ஷ்டம் என்ன ?
- ஒருவருக்கு நவரத்தின மோதிரம் சரியாக பொருந்தி விட்டால் அவரது வாழ்வில் வசந்தம் வீசுவது உறுதி.
- தொழிலில் சாதனைப் படைப்பதும். உத்தியோகத்தில் அவர் நினைத்து உயர்பதவிகளைப் பெற்று முன்னேற்ற நிலையை அடைவது என இருக்கும்.
- குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் இருப்பதோடு மகிழ்ச்சியும் எப்போதும் இருக்கும்.
- மரியாதையும், புகழும் தேடி வரும்.
யாரெல்லாம் அணியலாம்?
- நவகிரகங்களில் செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட மேஷ ராசி, மேஷ லக்னம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னம் மற்றும் சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நவரத்தின மோதிரத்தை அணியலாம்.
- செவ்வாய் பகவான் ஜாதகத்தில் ஆட்சி பெற்றோ அல்லது உச்சம் பெற்றோ இருப்பவர்கள் நவரத்தினத்தை அணியலாம்.
- ஒருவரின் பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்கள், அதாவது 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இதனை அணியலாம்.
யார் அணிய கூடாது?
- திருமணமான ஆண்கள் இந்த நவகிரக மோதிரத்தில் இரவில் அணிதல் கூடாது. அதுமட்டுமல்லாமல் பெண்கள் இந்த மோதிரத்தை கண்டிப்பாக அணியக்கூடாது, அணிந்தால் கிரக தோஷங்கள் ஏற்படும்.
- என்கணிதத்தில் பிறவி எண் 2, 7 கொண்டவர்கள் இந்த நவரத்தின மோதிரத்தை அணிதல் கூடாது.