அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவை உலகமே உற்றுநோக்குகிறது. குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் அதிபர் வேட்பாளர்களாக களம் இறங்கினர். இந்திய நேரப்படி நேற்று மதியம் சுமார் 3 மணி 30 நிமிடத்திற்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது.
முதன் முதலாக நியூ ஹாம்ஷையர் மாகாணத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு மாகாணமாக தொடங்கி நடைபெற்ற வந்த வாக்குப்பதிவு, சற்று நேரத்திற்கு முன்பு நிறைவடைந்தது. மொத்தம் 16 கோடிக்கும் அதிமானோர் வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குப்பதி முடிவடைந்த உடனே வாக்கு எண்ணும் பணியும் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி, டொனால்டு ட்ரம்ப் 108 மாகாணங்களிலும், ஜோ பைடன் 131 மாகாணங்களிலும் முன்னிலையில் உள்ளனர். அதிபர் பொறுப்பேற்று ஆட்சி அமைக்க மொத்தம் 270 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.